எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் என்னென்ன விவாதங்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும். குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்பே கடும் அமளி எழுந்து வருவதால் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச விவகாரம் என நாட்டில் தற்போது ஏரளமான சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .